கல்முனை கிழக்கில் தமிழர்களை ஒடுக்க முஸ்லீம்கள் கையிலுள்ள ஆயுதம்!

புதன் ஜூன் 26, 2019

தமிழர் வரலாற்றுத் தொன்மை புதைந்து கிடக்கும் தென் தமிழீழத்தில் இன்று தமிழன் இருப்பைத் தக்கத்துக் கொள்வதற்குப் போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. தமிழீழத்தின் தலைநகர் திருகோணமலை தொடக்கம் அம்பாறை,மட்டக்களப்பு மாவட்டங்களிலும் தமிழர் இருப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

ஆட்சி அதிகாரம் புரிந்த தமிழினம் அடங்கி, ஒடுங்கி வாழவேண்டிய அவல நிலை ஏற்பட்டிருக்கின்றது. இன்னும் சில காலம்தான் இருக்கின்றது. எஞ்சியிருப்பதையும் சிங்களவரும் முஸ்லிம்களும் பிடுங்கி விடுவார்கள் என்ற நிலையே தற்போது கிழக்கில் ஏற்பட்டுள்ளது.

கிழக்கில் தற்போது பேசுபொருளாக உள்ளது கல்முனையும் கன்னியாயும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை உப தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரும் போராட்டங்கள் வலுப்பெற்றிருக்கின்றன. இதுவரை கிழக்கில் கல்முனைக்குள் மாத்திரம் அடங்கிப்போயிருந்த இப்போராட்டம் இன்று விஸ்வரூபம் எடுத்திருக்கின்றது.

தமிழர் தாயகம் மட்டுமன்றி சிறிலங்காவிலும் பன்னாடுகளிலும் இது பேசுபொருள் ஆகியிருக்கின்றது. அதேபோன்றுதான் கன்னியாவும் அம்பாறை மாவட்டம் 20 பிரதேச செயலாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஏனைய 19 பிரதேச செயலகங்களும் முழுமையான அதிகாரங்களுடன் இயங்குகின்ற போதிலும் கல்முனை உப தமிழ் பிரதேச செயலகம் மட்டும் காணி, நிதி விடயங்களைக் கையாளும் அதிகாரம் அற்ற குறை பிரதேச செயலகமாக இருக்கின்றது.

1989 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இப்பிரதேச செயலகம் 29 கிராம சேவையாளர் பிரிவுகளை உடையது. 9798 குடும்பங்களைச் சேர்ந்த 36 ஆயிரத்து 346 பேர் வசிக்கின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் வசிக்கும் தமிழர்களின் தலைநகரமாக கல்முனை வடக்கு விளங்குகின்றது. இனரீதியான கணக்கெடுப்பில், 33,007 தமிழர்களும் 3215 முஸ்லிம்களும் 124 சிங்கள மக்களும் வசிக்கின்றனர்.

மத அடிப்படையில் நோக்கினால், 30,205 இந்துக்களும் 3215 இஸ்லாமியரும் 2802 கிறிஸ்தவர்களும் 124 பெளத்தர்களும் வசிக்கின்றனர்.

45 இந்து ஆலயங்கள்,12 கிறிஸ்தவ தேவாலயங்கள், 5 இஸ்லாம் பள்ளிவாசல்கள்,1பெளத்த விகாரை என்பன உள்ளன.

இதைவிட கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை, பிரபல முன்னணிப் பாடசாலைகள்,பல அரச திணைக்களங்களும் என்பனவும் இயங்குகின்றன. தமிழர்களின் புராதன நகரமாக இது அடையாளப்
படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி பிரதேச செயலாளர் பிரிவு 15.77 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டது.12.01.1989 ஆம் திகதி சுற்றுலா உதவி அரசாங்க அதிபர் அலுவலகம் என உருவாக்கப்பட்டது. 28.07.1993 ஆம் திகதி சிறீலங்கா அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய உதவி அரசாங்க அதிபர் பிரிவு எனத் தரமுயர்த்தப்பட்டது.

இதன் பின்னர் 1993 பிற்பகுதியில், நாடளாவிய ரீதியில் இயங்கிய 28 உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளை பிரதேச செயலகமாகத் தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும், கல்முனை வடக்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவு தவிர்ந்த ஏனைய 27 உம் தரமுயர்த்தப்பட்டன.

ஒரு பிரதேச செயலகமாக இயங்குவதற்கான அனைத்து அடிப்படைத் தகுதிகளையும் கொண்டிருக்கும் இப்பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகளே தடையாக இருக்கின்றனர்.

மேற்படி பிரதேச செயலாளர் பிரவின் எல்லைகளான நற்பட்டிமுனை,சாய்ந்தமருது,இஸ்லாமாபாத் உள்ளிட்ட பி
தேசங்களை உள்ளடக்கி முஸ்லிம் பிரதேச செயலகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. எனினும்,தமிழ்ப் பிர
தேச செயலகத்தை முழு அதிகாரத்துடன் இயக்குவதற்கு கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக தடைபோடப்பட்டு வருகின்றது.

கிழக்கில் அதுவும் அம்பாறையில் தமிழ்ப் பிரதேச செயலகம் ஒன்று உருவாகக்கூடாது என்பதில் முஸ்லிம் அரசியல்வாதிகள் அதிக அக்கறையுடன் செயற்படுகின்றனர். இந்தப் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவதற்கான கோரிக்கைகள் மேலெழும்புகின்ற போதெல்லாம் அதைத் தடுத்து நிறுத்துவதில் முஸ்லிம் அரசியல்வாதிகள் குறியாக இருக்கின்றனர்.

இதற்குக் காரணம், கிழக்கில் தமிழர்களுக்கான கட்டமைப்பு ஒன்று உருவாகினால் தமிழர்கள் எழுச்சி பெற்றுவிடுவார்கள் என்பதாகும். மலையகத் தமிழர்களை சிங்களவர்கள் நசுக்குவதைப் போன்று கிழக்குத் தமிழர்களை - அதுவும் பூர்வீகமாக அங்கு வாழும் தமிழர்களை - வந்தேறு குடிகளான முஸ்லிம்கள் நசுக்கி வருகின்றனர்.

இதற்காகவே, கல்முனை பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவதை முஸ்லிம்கள் எதிர்க்கின்றனர்.
பிரதேச செயலகமாகத் தரமுயர்ந்தால் அவர்களுக்கு காணி மற்றும் நிதி சார்ந்த விடயங்களைக் கையாளும் அதிகாரம் சென்றுவிடும். அதன் பின்னர் பல தரப்பினரின் உதவியுடன் தமிழர்கள் கல்முனையில் எழுச்சியடைந்துவிடுவர்.

இந்த எழுச்சியைத் தடுப்பதற்குத்தான் கல்முனை உப தமிழ்ப் பிரதேச செயலகத்திற்கு இதுவரை கணக்காளர் ஒருவர் நியமிக்கப்படவில்லை. அம்பாறை மாவட்டச் செயலகத்தில் உள்ள கணக்காளர் ஒருவரே இங்கு பதில் கடமைக்காக அனுப்பப்படுகின்றார்.

கிழக்கில் அனைத்துத் துறைகளையும் தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருக்கவே முஸ்லிம்கள் விரும்புகின்றனர். கிழக்கு மாகாணம் தங்களுக்கு உரியது என அவர்கள் வாதிடுகின்றனர். அங்கு பெரும்பான்மையாக வாழ்ந்த தமிழர்களின் எண்ணிக்கை தற்போது சிறுபான்மை ஆக மாற்றப்பட்டு வருகின்றது. தமிழர்களின் பிறப்பு வீதம் குறைக்கப்பட்டிருக்கின்றது.

கருத்தடை மாத்திரைகள் கலக்கப்பட்ட உணவுகள் தொடர்பான கருத்து தற்போது வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில்,முஸ்லிம்கள் தமது இலக்கை அடைவதற்கு கிழக்கிலும் இந்த முறையை பல வருடங்களுக்கு முன்னர் இருந்தே கையாண்டு வந்திருக்கின்றார்களோ என கிழக்கில்,அம்பாறையில் உள்ள சமூக செயற்பாட்டாளரான க.தர்மலிங்கம் என்பவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

அம்பாறை, மட்டக்களப்பை போன்றே திருகோணமலையும் தமிழர் கையை மீறிச் சென்றுவிட்டது என திருக்கோணேஸ்வரர் ஆலய பக்தர் ப.பரமசிவம்பிள்ளை கவலை வெளியிட்டார். திருக்கோணேஸ்வரம் எதிர்
காலத்தில் சிங்கள ஆதிக்கத்திற்குள் சென்றுவிடும் எனவும் அவர் தெரிவித்தார்.

கன்னியாய் வெந்நீருற்று பிரதேசம் சிங்களவர்களால் கையகப்படுத்தப்பட்டு வருகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு அங்கு ஒரு பக்கம் தமிழர்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர்.

இதற்கு பெளத்த பிக்குகளும் (தமது நலன்களைக் கருத்தில் கொண்டு) ஆதரவளித்துள்ளனர். ஆனால், அதே கல்முனையில், குறித்த பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கூடாது என முஸ்லிம்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

தமிழர்களும் முஸ்லிம்களும் பிட்டும் தேங்காய்ப்பூவும் போல கலந்து வாழ்ந்தவர்கள் என முன்னோரால் சொல்லப்பட்ட நம்பிக்கைகளை இன்று முஸ்லிம்களே சிதறடித்திருக்கின்றனர். அவர்கள் தனித் தாயகக் கனவில் மூழ்கியிருக்கின்றனர். கிழக்கை முஸ்லிம் தாயகமாக அறிவிக்கும் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

இவ்வாறான களச்சூழல்களின் பின்னணியில், தமிழர் நில ஆக்கிரமிப்பு, தமிழர் இருப்பு கேள்விக்குறியாகுதல், தமிழர்கள் நசுக்கப்படுதல் போன்ற விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வகிபாகம் என்ன என்ற கேள்வி எழுந்திருக்கின்றது. கிழக்கில் முஸ்லிம் எழுச்சிக்காக முஸ்லிம் அரசியல்வாதிகள் தீவிர முனைப்புடன் செயற்பட்டு வருகின்ற நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாய் மூடி மெளனியாக இருக்கின்றது.

111

இதற்கான விளைவை கடந்த வெள்ளிக்கிழமை (21) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுபவித்திருக்கின்றது.
கல்முனை பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவது கூட்டமைப்பால் முடியாத காரியம் அல்ல. ஆட்சிக்கு முண்டுகொடுத்துக்கொண்டிருக்கும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நினைத்தால் இது சாத்தியமாகாதது என்றில்லை.

எனினும், அவர்கள் சிங்களத் தரப்போடும் முஸ்லிம் தரப்போடும் இணக்க அரசியலைக் கடைப்பிடிக்கவே விரும்புகின்றனர்.

கல்முனை விவகாரம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்திய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மூன்று மாத கால அவகாசத்துடன் திரும்பி வந்தனர். அந்த அவகாசச் செய்தியை உண்ணாவிரதம் இருக்கும் மக்களுக்கு தெரிவிப்பதற்காக அங்கு சென்ற கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், அங்கு மக்களிடம் முறையாக வாங்கிக் கட்டியிருக்கின்றார்.

உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அவருக்கு கூறப்பட்டிருக்கின்றது. மக்கள் சூழ்ந்து நிற்க அங்கிருந்து நகர முடியாமல் திண்டாடினார் சுமந்திரன். இதன்போது அவரை நோக்கி செருப்புக்கள் வீசப்பட்டிருக்கின்றன. விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் சென்று அவரை மீட்கவேண்டிய நிலை ஏற்பட்டது. விழுந்தும் மீசையில் மண் படவில்லை என்றார் சுமந்திரன்.

மக்கள் பிரதிநிதிகள் எனத் தெரிவுசெய்யப்படுவோர் மக்களுக்கான பணியில் முழு வீச்சுடன் ஈடுபட வேண்டும். மக்களின் நாடித் துடிப்பை அறிந்து பணியாற்ற வேண்டும். அதை விடுத்து தேசம் பறிபோகும்போது சொகுசு பங்களாக்களில் உல்லாச வாழ்வு வாழும் இவர்களால் மக்களுக்கு எந்தப் பிரயோசனமும் ஏற்படப்போவதில்லை.

மக்கள் தெருக்களில் சாவை அணைத்துக்கொண்டிருக்கும்போது சொகுசு கார்களில் சென்று அவர்களைப் பார்த்துவிட்டு, எந்தத் தீர்வையும் வழங்காமல் செல்பவர்கள் அரசியல்வாதிகளாக இருக்க முடியாது.

ஆட்சியில் பங்கெடுப்பவர்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியாவிட்டால் அவர்கள் முட்டாள்கள் அல்லது அரசின் சுகபோகங்களை அனுபவிக்கிறார்கள் என்றே அர்த்தம். இங்கே கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசின் சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டு மக்களை ஏமாற்றுகின்றனர்.

ஆக, இந்த விடயங்களில் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ள தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் அக்கறை எடுக்கவேண்டும். இனத்தின் இருப்பைத் தக்கவைப்பதற்காக நிலம் தேவை. நிலத்தை இழந்தால் வாழ்வைத் தொலைத்துவிடுவோம்.

கல்வியும் மொழியும் பண்பாடும் நிலமும் எமது இனக் கட்டமைப்பைத் தாங்கி நிற்கும் தூண்கள் எனத் தமிழீழ தேசியத் தலைவர் கூறியதற்கு அர்த்தம் கொடுக்கவேண்டும்.

எமது தாயகத்தில் உள்ள ஒரு சிறு நிலத்தைக்கூட நாம் இழப்போமாக இருந்தால் எமது மாவீரர்களின் கனவுகள் மெய்ப்படாது.

எனவே, எமக்காக மரணித்த, எமக்காக தியாகங்களைப் புரிந்த, எமக்காக தங்களை அர்ப்பணித்த புனிதமானவர்களை மனதில் இருந்தி எமது நிலம் மீட்புக்கான பணிகளைத் தீவிரப்படுத்துவோம். இது அனைவரதும் கடமை. அதை உணர்ந்து பணியாற்றுவோம்.

தாயகத்தில் இருந்து’ காந்தரூபன்

நன்றி: ஈழமுரசு