கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இளைஞன் காவல் துறை சாஜன் மீது தாக்குதல்!

செவ்வாய் மார்ச் 19, 2019

மட்டக்களப்பு  வாழைச்சேனை பிரதேசத்தில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட ஒருவர் காவல் துறை  மீது தாக்குதல் நடத்தியதில் காவல் துறை  சாஐன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றதாக வாழைச்சேனை காவல் துறையினர்  தெரிவித்தனர்.

காவல் துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து  நேற்று காலை 9 மணியளவில் குறித்த பிரதேசத்தில் உள்ள 26 வயதுடைய இளைஞன் ஒருவரரை காவல் துறை 2 கிராம் கஞ்சாவுடன் கைது செய்து அவரின் ஒரு கையில் விலங்கிட்டு விலங்கின் மறு பகுதியியை காவல் துறை சாஜன் தனது கையிலிட்டாவாறு அவரை காவல் துறை நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட் இளைஞனைகாவல் துறை நிலைய சிறைக்கூட்டில் அடைக்க முயன்றபோது இளைஞன் காவல் துறை சாஜன்  மீது விலங்குடன் முகத்தில் தாக்குதல் நடத்தி இருவரும் கட்டிப்பிடித்து அடிபட்டதில் காவல் துறை   படுகாயம் அடைந்ததையடுத்து வாழைச்சேனை வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை  தெரிவித்தனர்.