கஞ்சிப்பானை உண்ணாவிரதம்!

சனி செப்டம்பர் 14, 2019

பாதாள உலக குழுவின் முக்கியஸ்தர் கஞ்சிப்பானை இம்ரான் பூஸா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கஞ்சிப்பானை இம்ரானுக்கு தொலைப்பேசிகளை கொண்டுசென்றமை தொடர்பில் கைது செய்யப்பட்ட  தந்தையார் மற்றும் சகோதரன் உள்ளிடடோரை விடுதலை செய்யக்கோரியே குறித்த உண்ணாவிரத போராட்டத்தை ஆராம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை விடுதலை செய்யும் வரை இந்த உண்ணாவிரதம் தொடருமென அவர் தெரிவித்ததாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்தன.