கனேடிய பாராளுமன்றத்தின் முன்பாக தமிழர்களுக்கு எதிராக சிங்களவர்கள் போர்க் கொடி!

திங்கள் மே 13, 2019

ஒட்டாவா, மொன்றியால், டொரோண்டோ அமைப்புகளால் ஒழுங்கு செய்யப்பட பத்தாவது ஆண்டு தமிழினப் இனப்படுகொலை நினைவு நிகழ்வில் பல நூற்று கணக்கான தமிழ் மக்கள் பங்கு கொண்டு 2009 நடந்தது.

தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலை  என்பதை கனடிய மற்றும் பல்லின  மக்களுக்கு எடுத்து கூறும் வகையில் தாம்  2009 ஆண்டு பாவித்த இனப்படுகொலை பதாதைகளை தாங்கியபடி பாராளுமன்றத்தில் முன்னே முறையாக அனுமதி பெற்று  நிகழ்வுகளை நடத்திக் கொண்டு இருந்தார்கள்.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட  சிங்கள இனத்தை சார்ந்த ஒரு பவுத்த பிக்கு உட்பட 25 நபர்கள் சிங்கக்  கொடியுடன் தமிழர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர். இலங்கையில் நடந்தது இனப்படுகொலை இல்லை என்றும். போரில் தீவிரவாதிகள் மட்டுமே கொல்லப்பட்டனர்  என்றும் சிங்கக்  கொடியை  உயர்த்தி பிடித்தபடி கோசம் இட்டனர்.

இந்த நிகழ்வில் தமிழ் மக்களின் 2009 இனப்படுகொலை சாட்சியாளர் Dr. Varatharajah பங்குகொண்டு இறுதிப்போரில் நடந்த விடயங்களை மிகவும் விரிவாக விளக்கமளித்தார். மொன்றியலில் இருந்து வந்த பிதா Jude Nixon அவர்கள் Easter தினத்தில் நடந்த படுகொலை மற்றும் 2009 இனப்படுகொலை போன்றவை மீண்டும் எமது இனத்துக்கு நடக்ககூடாது என்று பிரார்த்தனை செய்தார்.

அதனை தொடர்ந்து அடுத்த தலைமுறையை சார்ந்த இளையோர் பலர் சிறுவர்களை பார்த்து நீங்கள் தான் அடுத்த தலைமுறையினர் என்றும் எமது இனத்தின் விடுதலைக்காக உழைக்கவேண்டும் என்றும் எடுத்து உரைத்தனர்.

இறுதியாக ஒட்டாவா பாராளுமன்ற உறுப்பினர்  Anita Vandenbeld அம்மையார் அவர்கள் தமிழ் இனத்திற்கு எதிராக நடந்த  கொடூரமான இனப்படுகொலை குறித்த விடயங்களை தான் மிக நன்றாக அறிந்து உள்ளதாகவும், தமது அரசாங்கம் ஐக்கிய நடுகல் அமைப்புடன் சேர்ந்து நிரந்தர சமாதானத்தை உருவாக்க ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாகவும் கூறினார்.

இறுதியாக இரண்டு நிமிட அமைதி வணக்கத்துடன் இனப்படுகொலை ஞாபகார்த்த நிகழ்வு ஒட்டாவா பாராளுமன்றத்தின் முன் நிறைவடைந்தது. கலந்து கொண்ட அனைவரும் எதிர்வரும் காலங்களில் மேலும் உத்வேகத்துடன் தமிழின விடுதலை நோக்கிய போராட்டங்களை முன்னெடுப்பதாக உறுதி எடுத்தனர்.