கண்காணிப்பு குழுவினர் நாளை வருகின்றனர்!

திங்கள் நவம்பர் 11, 2019

16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக, 17 பேர் அடங்கிய, வெளிநாட்டு கண்காணிப்பு குழுவினர் நாளை (12) , நாளை மறுதினம்(13) இலங்கைக்கு வரவுள்ளனரென, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வரவுள்ள குறித்த குழுவில் இந்தியா, இந்தோனேசியா, தென்கொரியா, தென் ஆபிரிக்கா, மாலைத்தீவு, பூட்டான், பிலிப்பைன்ஸ், மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்களே இலங்கைக்கு வருகைத் தரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.