கனடாவில் தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக ரொரன்டோ காவல்துறை

வெள்ளி மார்ச் 22, 2019

கனடாவில் தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக ரொரன்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

59 வயதான பேரின்பநாதன் மாணிக்கம் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

அவரை கண்டுபிடிக்க உதவுமாறு ரொரன்டோ பொலிஸார் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர்.

நேற்று முன்தினம் Eglinton and Allen வீதிகளுக்கு அருகாமையில் மாலை 5:50 மணியளவில் காணப்பட்டுள்ளார்.

பேரின்பநாதன் மாணிக்கம் என்பவரின் பாதுகாப்பு குறித்து பொலிஸார் கவலை வெளியிட்டுள்ளனர்.