கனடிய மண்ணில் ஈகைச்சுடர் திலீபனின் நினைவுநாள்

வெள்ளி செப்டம்பர் 25, 2020

கண்டனப் போராட்டம் நடைபெறும் நாள்: 25-9-2020 வெள்ளிக்கிழமை காலை 10 மணி தொடக்கம் மாலை 12.30 மணி வரை
இடம்: சிறீலங்கா தூதரகம் முன்பு  [36 Eglinton Ave W, Toronto, ON M4R 1A1]
 
சிறிலங்கா அரசின் ஈழமண் ஆக்கிரமிப்பினை எதிர்த்து இந்திய அரசிடம் ஐந்தம்ச கோரிக்கையை முன்வைத்து 12 நாட்கள் நீராகாரம் கூட அருந்தாமல் அகிம்சை வழியில் உண்ணா நோன்பிருந்து போராடி செப்டம்பர் 26, 1987 அன்று தனது உன்னத உயிரை தமிழினத்தின் விடியலுக்காக ஈகம் செய்தார் ஈகைச்சுடர் திலீபன். அவரின் நினைவுகளை நினைந்துருகி வணங்கக் கூட முடியாதவாறு நீதிமன்றத் தடை உத்தரவு விதித்தும், காவல்த்துறையினர், இராணுவம்,  புலனாய்வாளர்களை குவிக்கும் சிறிலங்கா அரசின் அதிகார அடக்குமுறைகளைக் கண்டிக்கும் வகையில் கண்டனப் போராட்டமும் ஈகைச்சுடர் திலீபனிற்கு மலர்தூவி அகவணக்கம் செலுத்தவும் அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

அடையாள உன்னாநோன்பு நடைபெறும் நாள்: 26-9-2020 சனிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை
இடம்: தமிழிசைக் கலா மன்றம் [1120 Tapscott Rd,Unit 3 Scarborough]

உண்ணா நோன்பில் கலந்து கொள்ள விரும்புவோர் எம்மை தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
 
தொடர்ந்து வணக்க நிகழ்வு மாலை 6.00 மணி தொடக்கம் மாலை 8.00 மணி வரை Markham & Steele சந்திப்பு.
 
'மக்கள் புரட்சி வெடிக்கட்டும்'
கனடா தமிழர் கலை பண்பாட்டு கழகம்.
கனடிய தமிழர் சமூகம் மாணவர் சமூகம். 416-662-2326
 

நாம் வாழும் நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டு முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைப்பேணி அனைத்து நிகழ்வுகளிலும் எழுச்சிகொள்ள அனைத்து அன்பு உறவுகளும் வாருங்கள்!

y