கொசுத் தொல்லைகள்!

திங்கள் சனவரி 13, 2020

இவை கடிக்காது! காது அடைக்க நொய்ய்ய்... என்று ரீங்காரம் மட்டுமே இடும்.

‘‘ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய அரசாங்கம் கையாளும் மாற்றமானது எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத விதத்தில் அமைந்துள்ளது. இதுவரை காலமாக தமிழ் மக்கள் உணர்ந்துவந்த அடக்குமுறை மேலும் பலமடையும் வகையில் அரசாங்கம் செயற்படுகின்றது. தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடவேண்டாம் என அரசாங்கம் கூறுவதானது மீண்டும் இந்த நாட்டில் இனங்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்த அரசாங்கமே வித்திடுவதாக அமையும்.’’

                 * இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா.111

‘‘ஐக்கியத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. ஆனால், சம்பந்தன் சுமந்திரன் போன்றோர் பேசச் கூடிய ஐக்கியம் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல. திம்பு காலத்தில் இருந்தே ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஐக்கியத்திற்காக இணைந்து செயற்பட்டு வந்திருக்கிறது. திம்பு காலத்தில் இருந்து இன்றுவரை பல்வேறுபட்ட ஐக்கியங்கள் தமிழ் மக்கள் மத்தியில் உருவாகுவதற்கு நாங்கள் காரணகர்த்தாக்காளவும் இருந்திருக்கிறோம். ஆகவே நாங்கள் ஐக்கியத்திற்கு எதிரானவர்கள் கிடையாது என்பதை தெளிவாக கூறிக்கொள்கிறோம்.’’

111

* ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

‘‘2015ம் ஆண்டு நல்லிணக்க அரசாங்கம் ஒன்று கொண்டுவரப்பட்டதன் பின்னர் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் பல தசாப்தங்களின் பிறகு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக நானும் எமது கட்சியின் தலைவர் சம்பந்தனும் கலந்துகொண்டிருந்தோம். அதற்குப் பல காரணங்கள் இருந்தன. நல்லிணக்க சமிக்ஞைகள் பல இருந்தன. தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டது.

தமிழில் தேசிய கீதம் பாட வேண்டாம் எனக் கூறுவது ஒரு நாட்டுக்குள்ளே இருக்கின்ற தேசிய இனங்களுக்கு இடையே ஒப்புறவு, நல்லிணக்கம் என்பவற்றை முற்று முழுதாக முறியடிக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் செய்து வருகின்றது என்பதையே வெளிக்காட்டுகின்றது. ஒரு நாட்டுக்குள்ளே இருக்கின்ற தேசிய இனங்களுக்கு இடையே ஒப்புறவு, நல்லிணக்கம் என்பவற்றை முற்றுமுழுதாக முறியடிக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் செய்து வருகின்றது என்பதனை நாம் அரசுக்கு சொல்லி வைக்க விரும்புகின்றோம்.’’

த.தே.கூ. ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்,
யாழ். ஊடகங்களுக்குக் கருத்துக்களை வெளியிடும் போது...

(அது யாழில், இது வவுனியாவில்)

‘‘நாங்கள் தேசிய கீதத்தினை பாட விட வேண்டும் என்று கேட்கவில்லை. எங்களை விட்டால் போதுமென்றே கேட்கின்றோம். அதனையே அரசாங்கத்திற்கும் சொல்ல விரும்புகின்றோம். சர்வதேசத்தில் இலங்கையும் சட்டத்தின் ஆட்சியை மதிக்கின்ற நாடு என்று கருத வேண்டும் என விரும்பினால் 70 வருட காலமாக இத்தனை தசாப்தங்களாக தொடர்ச்சியாக எங்கள் மக்கள் கொடுக்கின்ற ஜனநாயக தீர்ப்புக்கு மதிப்பளித்தே ஆக வேண்டும்.

அது செய்யப்பட்டால் தான் இந்த நாட்டில் நல்லிணக்கம் உருவாகலாம். முன்னேற்றம் அடையும். அத்துடன் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து விடுபட முடியும். அது செய்யப்படாத வரையில் நாங்கள் தொடர்ந்தும் போராடிக்கொண்டே இருப்போம். உங்களையும் உய்யவிட மாட்டோம்.’’

*த.தே.கூ. ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வுனியாவில் இலங்கை தமிழரசுக்கட்சியின் 70வது ஆண்டு நிறைவு விழா நிகழ்வில்...111

 

‘‘தமிழ் மக்களுக்கு விரோதமான பல்வேறு செயற்பாடுகளை புதிய அரசாங்கம் முன்னெடுத்து வருகின்து. இன்றைய ஆட்சியாளர்கள் அதிகாரத்திற்கு வந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்குமென்பது பலராலும் எதிர்பார்க்கப்பட்ட விடயமாக இருக்கலாம். ஆனால் அத்தகைய சம்பவங்கள் இடம்பெறுவதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

இதே போல கடந்த ஆட்சிகளிலும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போது கடுமை
யான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கின்றோம். இந்த நிலைமைகள் இனியும் தொடர்வதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஆகையினால் இப்படிப்பட்ட விடயங்களிலாவது தமிழர் தரப்பு ஒருமித்து செயலாற்ற வேண்டியது அவசியம்.’’

111

* தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்த வெளியிடும் போது...

நன்றி: ஈழமுரசு

111