கொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

புதன் நவம்பர் 13, 2019

கடந்த காலங்களில் கொலைசெய்யப்பட்ட  ஊடகவியலாளர்கள், கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக குறித்த கவனயீர்ப்புப் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.