கொல்பேக் நகரில் கரும்புலிகள் நாள்நினைவேந்தல் நிகழ்வு

திங்கள் ஜூலை 11, 2022

 
தாயக விடுதலைப் போரில் தமது உயிரைப் போராயுதமாக்கி எமது இனத்தின் காப்பரண்களாக திகழ்ந்தவர்கள் கரும்புலிகள்! 

அவர்களை நெஞ்சிலேந்தி, கரும்புலிகள் நாள் நினைவேந்தல் நிகழ்வு மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. அதில் அகவணக்கம், பொதுச் சுடரேற்றம், பொதுமக்களின் ஈகைச் சுடரேற்றம் மற்றும் மலர்வணக்கத்துடன் கரும்புலிகள் கானங்கள் இசைக்கப்பட்டு உணர்வுபூர்வமாக இடம்பெற்ற வீரவணக்க நிகழ்வு இறுதியாக தமிழர்களின் தாரக மந்திரத்துடன்  நிறைவு பெற்றது.