கொழும்பில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய ஒழுங்கை நடைமுறை

வெள்ளி செப்டம்பர் 18, 2020

கொழும்பில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய ஒழுங்கை நடைமுறையில் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க  காவல்  துறையினர்  தெரிவித்துள்ளனர்.

புதிய போக்குவரத்து சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் களுக்கு அதிக இடத்தை வழங்க மேல் மாகாண மூத்த பிரதி காவல்  துறை மா அதிபர் மற்றும் போக்குவரத்து ஆணை யம் அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக அமுல்படுத்தப் பட்டு வரும் புதிய வீதி ஒழுங்கு தொடர்பில் மொறட்டுவை பல்கலைக்கழகம் மற்றும் காவல்  துறையினர்  மேற்கொண்ட ஆய்வுகளை அடுத்து மோட்டார் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு அதிக இடம் வழங்கப் பிரதி பொலி மா அதிபர் மற்றும் போக்குவரத்து ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளுக்கு ஒதுக்கப்பட்ட இடது பாதையைப் பயன் படுத்துமாறு முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் சாரதி களுக்கு காவல்  துறையினர்  முன்னர் தெரிவித்தனர்.

இருப்பினும் நேற்று இடது பாதையில் பஸ்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகள் பயணித்தமை காரணமாக இடது பாதையில் நெரிசல் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் காவல்  துறையினர்  நடத்திய ஆய்வின் பின்னர், ஏனைய பாதை களில் போக்குவரத்து குறைவாக இருந்தால் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் குறித்த பாதையைப் பயன்படுத்த காவல்  துறையினர்  அனுமதி வழங்கத் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.