கொழுப்பை நீக்கும் கிருமி!

புதன் ஏப்ரல் 01, 2020

நாம் உண்ணும் உணவில் கொழுப்பு மிகுதியாக இருந்தால், அது நமது ரத்தத்திலும் கலந்து உலவிக்கொண்டிருக்கும். இந்த மிகை கொழுப்பை விரைவில் நீக்க, நமது கல்லீரல் உற்பத்தி செய்யும் ஏ.பி.ஓ.ஏ.,5 என்ற புரதம் உதவுகிறது.

இந்த புரதத்தை வேகமாக உற்பத்தி செய்ய வேறு வழி உண்டா என்று அமெரிக்காவின் சின்சினாட்டி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ந்தபோது, சில வகை பேக்ட்ரீயாக்களை வைத்து ரத்தக் கொழுப்பைக் கரைக்கும் புரதத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று கண்டறிந்தனர்.

விலங்குகளுக்கு பேக்டீரியா தயாரித்த புரதத்தை தந்தபோது அவற்றின் ரத்தத்தில் இருந்த மிகையான கொழுப்பு விரைவில் நீக்கப்பட்டது. மனித உடலிலும் இதே போல் பேக்டீரியா உற்பத்தி செய்த புரதம் வேலை செய்தால், உடல் பருமன் நோய்க்கு பேக்டீரியாவை வைத்தே குட் பை சொல்லிவிட முடியும்.