கொங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கினால் வெற்றி பெறுவார்களா? ப.சிதம்பரம்

ஞாயிறு மார்ச் 07, 2021

கொங்கிரஸ் முந்தைய தேர்தல்களில் குறைவான இடங்களில் வெற்றிபெற்றதே, தற்போது குறைவான தொகுதிகள் பெற்றிருப்பதற்கு காரணம் என ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், காங்கிரஸ் புத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில், கொங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது, கூட்டணியில் கடந்த தேர்தலை விட குறைவான இடங்களை பெற்றிருப்பதற்கு, திமுகவை குற்றம் சொல்லி பயனில்லை என அவர் குறிப்பிட்டார்.

திமுக கூட்டணியில் 2011இல் 63 தொகுதிகள் பெற்று ஐந்து இடங்களிலும், 2016 இல் 41 தொகுதிகள் பெற்று எட்டு இடங்களிலும் மட்டுமே, கொங்கிரஸ் வெற்றி பெற்றதாகவும் ப.சிதம்பரம் கூறினார்.

கொங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கினால், வெற்றி பெறுவார்களா என்ற கவலை திமுகவிற்கு உள்ளதாகவும், ப.சிதம்பரம் கருத்து தெரிவித்தார்.