கொரோனா சமூக மயமாகும் அபாயம்

சனி அக்டோபர் 17, 2020

 தற்போது நாட்டில் அங்குமிங்குமாக கொரோனா வைரஸ் அதிகளவில் காணப்படுகின்றது என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரி வித்துள்ளது.

இதுவரை நாட்டில் வைரஸின் தோற்றுவாயைக் கண்டறிய முடியாதுள்ள தாகச் சங்கத்தின் உதவி செயலாளர் நவீன் டி சொய்சா தெரிவித்தார்.

இதன் காரணமாக, கொரோனா சமூகமயமாக்கப்பட்டதாக அறிவிப்பு களை வெளியிட வேண்டிய ஆபத்தான இறுதிக் கட்டத்தை இலங்கை எட்டியுள்ளது என அவர் தெரிவித்தார்.

இருப்பினும், நோயாளிகளில் அறிகுறிகளைக் குறைப்பது ஒரு பெரிய நன்மை என்று அவர் தெரிவித்தார்

கொரோனா நோய்த்தொற்றுகளின் தொடக்க புள்ளியைத் தேடுவதை விட நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து அவசியமான நடவடிக்கை எடுக்கக் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக  அவர் குறிப்பிட்டார்.