கொரோனா காலத்தில் சென்னை மாநகராட்சி அதிரடி! 3.48 கோடி அபராதம் வசூல்-

செவ்வாய் சனவரி 12, 2021

அரசின் பாதுகாப்பு வழிமுறைகளான முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் வாசலில் கிருமி நாசினி திரவங்கள் வைத்தல் போன்ற வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற மாநகராட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள், அங்காடிகள் போன்றவற்றில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என மாநகராட்சி அலுவலர்களால் தொடர்ந்து கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் மற்றும் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 8-ந் தேதி வரை மொத்தம் ரூ.3.48 கோடி அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.