கொரோனா காரணமாக ஐபோன் வெளியீடு ரத்து!

புதன் மார்ச் 11, 2020

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் எஸ்.இ. 2 வெளியீடு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மார்ச் 31 ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டு இருந்த ஆப்பிள் நிகழ்வு கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சம் காரணமாக ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவ்விழாவில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எஸ்.இ. 2, ஐபேட் ப்ரோ உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. 

 

ஐபோன் 11 ப்ரோ

 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மக்கள் அதிகமாக கூடும் நிகழ்வுகளுக்கு சான்டா கிளாரா கவுண்ட்டி தடை விதித்து இருப்பதை தொடர்ந்து மார்ச் நிகழ்வினை ஆப்பிள் ரத்து செய்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஆப்பிள் நிறுவனம் தனது பொறியாளர்கள் ஆசிய நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்க உத்தரவிட்டு இருக்கிறது.

ஆப்பிள் பொறியாளர்கள் பயணம் செய்ய ஏப்ரல் மாதம் வரை தடை விதித்து இருக்கிறது. இதன் காரணமாக ஐபோன் 12 சீரிஸ் மாடல்களுக்கான உற்பத்தி பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.