கொரோனா பரவலை தடுக்க உணவில் சேர்த்து கொள்ளவேண்டியவை!

செவ்வாய் மே 26, 2020

 கொரோனா பரவலை தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த வேண்டும் என்பதால் உணவில் அதிகமாக இஞ்சி, பூண்டு, மிளகு, மஞ்சள் தூள் ஆகியவற்றை அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும்.

உணவில் தினமும் இஞ்சி, மஞ்சள் தூள், மிளகு, நெல்லிக்கனி, எலுமிச்சை போன்றவற்றை தவறாமல் சேர்த்துகொள்வது நிச்சயம் வைரஸ் தொற்று உங்களை அண்டாமல் பாதுகாக்கும். அதை எதிர்த்து போராடக்கூடிய எதிர்ப்புசக்தியை உங்கள் உடலுக்கு கொண்டு வர இந்த வகை உணவுகள் உதவும்.

“இஞ்சி, பூண்டு, மஞ்சள், மிளகு போன்றவை நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்தவை. தற்போதைய இடர்ப்பாடான சூழலில் நோய் எதிர்ப்பு சக்தி அவசியம் தேவை என்பதாலேயே இந்த பொருட்களை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். தவிர கசாயமாகவும் காய்ச்சி காலை, மாலை என இரு வேளைகளில் குடிக்க வேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பவர்களை வைரஸ் அவ்வளவு எளிதில் தாக்காது. அதற்கேற்ப அன்றாட உணவில் வைட்டமின் சி உணவுகளை அதிகம் எடுத்து கொள்வது மிகவும் முக்கியம்.

நெல்லிக்கனி எதிர்ப்புசக்தியை அதிகரிக்க கூடியது. தினமும் காலை நெல்லிக்காயை கொட்டை நீக்கி மிக்ஸியில் அடித்து சாறு பிழிந்து குடிக்கலாம். தினமும் ஒரு வேளை எலு மிச்சை சாறு, சமபாதி அளவு நெல்லிச்சாறு கலந்து பழச்சாறாக குடிக்கலாம். இனிப்புக்கு தேன் சேர்த்துகொள்ளலாம்.

பழங்கள் அனைத்துமே சத்துமிக்கவை என்பதால் பழங்கள் இல்லாமல் உணவை எடுக்க வேண்டாம். குறிப்பாக கொய்யா பழம் தினமும் சாப்பிடுவது எதிர்ப்புசக்தியை அதிகரிக் கும். இவை தவிர கீரைகள் காய்கறிகளையும் பயன்படுத்துங்கள்.உணவில் காரத்துக்கு மிளகாயை சேர்க்காமல் மிளகை சேருங்கள்.

கிருமி நாசினியான மஞ்சளை அன்றாடம் சமையலில் சேர்ப்பதுண்டு என்றாலும் கூட சற்று அதிகப்படியாக சேர்க்கலாம். குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் தினமும் பாலில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் மற்றும் மிளகுபொடியை சேர்த்து கொடுப்பதும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.