கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2042 ஆக அதிகரிப்பு

செவ்வாய் ஜூன் 30, 2020

இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

 அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2042 ஆக அதிகரித்துள்ளது. 

 பாகிஸ்தானில் இருந்து வந்த மூவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.  தற்போது வரை 1678 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 836 கடற்படையினர் இதுவரையில் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளனர்.