கொரோனா தொற்றினால் வறுமையில் வாடும் வாகரை பிரதேச மக்கள்

புதன் மார்ச் 25, 2020

நாட்டின் அசாதாரணநிலை நீடித்தால் வீட்டில் முடங்கிக்கிடக்கும் அன்றாடம் உழைத்து அடிப்படை வசதிகளை பூர்திசெய்யும் குடும்பங்கள் மட்டக்களப்பு மாவட்டம்  கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேசத்தில் பலர் உள்ளனர். இவர்களுகான அவசர உலர் உணவுப் பொருட்கள் வழங்கவேண்டிய தேவை உள்ளது.

ஓமடியாமடு, மதுரங்கேணிக்குளம்,குஞ்சன்குளம்,கிருமிச்சை, கட்டுமுறிவு, ஆண்டான்குளம், தோணிதாண்டமடு, வெருகல் உட்பட கோறளைப்பற்று வடக்கு வாகரைப்பிரதேச அனைத்து கிராமங்களைச் சேர்ந்த வறிய மக்கள் வாழ்கின்றனர்.

அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் அவர்கள் கைவசம் கிடைக்கும் வரை காத்திருக்கும் வரை விரைவாக நாமும் செயற்படுகின்றோம். கடந்த திங்கட்கிழமை வெருகல்,புதூர் மற்றும் புளியன்கன்றலடி ஆகிய கிராமங்களில் சிலருக்கான உணவுப்பொதிகளை தனவந்தர் மூலமாக வழங்கியிருந்தோம்.

இந்த கைங்கரியத்தில் கௌரவ பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் என பலரும் தாமாக முன்வந்து பயனாளிகளை தெரிவுசெய்து ஒத்துளைப்புகளை வழங்கினர். அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள்.

மனமிருந்தால் முயற்சி செய்வோம். ஒவ்வொரு கிராமத்திலும் பல சங்கங்கள், மதத்தலங்களின் அமைப்புகள் இன்னும்பல நிதி நிறுவனங்கள், தனவந்தர்கள் உள்ளடங்கலாக பலர் உள்ளோம். எம்மக்களின் வயிற்றுப்பசி போக்க உதவிடுவோம். எமது கிராமங்களில் உள்ள கடைகளில் அவர்களுக்கான உணவுப்பொருட்களை வாங்கி வழங்கலாம்.