கொரோனா தொற்று சந்தேகத்தில் 4 வயது குழந்தை யாழ்.போதனா மருத்துவமனையில் அனுமதி

வியாழன் மார்ச் 26, 2020

கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 4 வயது குழந்தை ஒன்று யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இதேவேளை, யாழ். தாவடி பகுதி இன்றும் முடக்கப்பட்டுள்ளது.

கிராம சேவையாளரின் அலுவலகம் தாவடி சந்தியில் இயங்கி வருவதுடன், நாளாந்த செயற்பாடுகள் மற்றும் மக்களுக்கு தேவையான சுகாதார வசதிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சுவிட்சர்லாந்தில் இருந்து வருகை தந்த போதகரால் கடந்த 15 ஆம் திகதி யாழ். அரியாலையில் ஆராதனை நடத்திய மத போதகரை சந்தித்த அரியாலையை சேர்ந்த ஒருவரும் கொரோனாவால் பீடிக்கப்பட்டுள்ளார்.