கொரோனா தொற்று பாதிப்பு! தீவிர சிகிச்சைப் பிரிவில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ்-

புதன் சனவரி 20, 2021

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கொரோன பாதிப்பு காரணமாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ்  கடந்த 5 ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அமைச்சர் காமராஜ் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு உள்ளார்.

அவருக்கு "வென்டிலேட்டர்" உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் காமராஜ், செவ்வாய்க்கிழமை மாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகின.

தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அமைச்சருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.