கொரோனா தடுப்பூசி செலுத்தியமைக்கான அட்டையை உடன் வைத்திருக்க வேண்டும்

சனி ஜூலை 31, 2021

 கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக சுகாதார அமைச்சால் வழங்கப்படும் அட்டையை உடன் வைத்துக் கொள்வதைக் கட்டாயப்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக உறுதி செய்யப்பட்டு சுகாதார அமைச்சால் வழங்கப் பட்ட அட்டை இன்றி அரசு நிறுவனங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளை அணுகுவதைக் கட்டாயமாக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக உறுதி செய்யப்பட்டு  சுகாதார அமைச்சால் வழங்கப்பட்ட அட்டையை அரச நிறுவனங்கள் மற்றும் சிறப்பு அங்காடிகளுக்குச் செல்லும் போது உடன் வைத் துக்கொள்வது தொடர்பாகக் கட்டாயமாக்குவது மிகவும் முக்கியமானது என்றும் இது குறித்த இறுதித் தீர்மானம் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் எனவும் கொரோனா தடுப்பு செயலணியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.