கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ரத்தான கூகுள் ஐ.ஒ. 2020!

வியாழன் மார்ச் 05, 2020

கூகுள் நிறுவனத்தின் 2020 ஐ.ஒ. டெவலப்பர்கள் நிகழ்வு கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

கூகுள் நிறுவனம் தனது ஐ.ஒ. 2020 டெவலப்பர்கள் நிகழ்வினை கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சம் காரணமாக ரத்து செய்துள்ளது. 2020 டெவலப்பர்கள் நிகழ்வினை கூகுள் நிறுவனம் கலிஃபோர்னியாவில் மே 12 முதல் மே 14-ம் தேதி வரை நடத்த திட்டமிட்டு இருந்தது.

‘டெவலப்பர் குழுவாக இம்முறை நாம் ஒன்றுகூட முடியாதது வருத்தம் அளிக்கிறது, எனினும், உங்களது ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியம்’ என கூகுள் தெரிவித்துள்ளது. 

 

Google Developers@googledevs

A update.

Due to concerns around the coronavirus (COVID-19), we've decided to cancel this year's physical event at Shoreline Amphitheatre. It's sad that we won't be able to gather as a developer community but your health and safety is our priority. (1/2)

2,713

Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை

இதைப் பற்றி 1,451 பேர் பேசுகிறார்கள்

 

மேலும் சர்வதேச டெவலப்பர்களுடன் தொடர்பு கொண்டு இணைப்பில் இருப்பதற்கான வழிமுறைகள் பரிசீலனை செய்யப்படுவதாகவும், இதுபற்றிய விவரங்கள் கூகுள் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

 

2020 ஐ.ஒ. டெவலப்பர்கள் நிகழ்வுக்கு பதிவு செய்தவர்கள் ஐ.ஒ. 2021 நிகழ்வில் கலந்து கொள்வதற்கான நுழைவு சீட்டுக்களை பெற்றுக் கொள்ளலாம். சிறு வியாபாரங்கள் மற்றும் பள்ளிகளுக்கு ஸ்டெம் ஆய்வு மற்றும் கொரோனா வைரஸ் பாதுகாப்பிற்கு பத்து லட்சம் டாலர்களை வழங்குவதாக கூகுள் அறிவித்துள்ளது.

 

Sundar Pichai@sundarpichai

We want to help businesses and schools impacted by COVID-19 stay connected: starting this week, we'll roll out free access to our advanced Hangouts Meet video-conferencing capabilities through July 1, 2020 to all G Suite customers globally. https://cloud.google.com/blog/products/g-suite/helping-businesses-and-schools-stay-connected-in-response-to-coronavirus …

Connecting businesses and educators with advanced Hangouts Meet capabilities | Google Cloud Blog

We’re rolling out free access to our advanced Hangouts Meet video-conferencing capabilities to help businesses and educators connect no matter where they’re located.

cloud.google.com

13.7ஆ

Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை

இதைப் பற்றி 4,011 பேர் பேசுகிறார்கள்

முன்னதாக 2020 சர்வதேச மொபைல் காங்கிரஸ், ஃபேஸ்புக் நிறுவனத்தின் எஃப்8 டெவலப்பர்கள் நிகழ்வு, கேம் டெவலப்பர்கள் நிகழ்வு உள்ளிட்டவையும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டன. நிகழ்வு ரத்து செய்யப்பட்டு இருந்தாலும், புதிய அம்சங்கள் மற்றும் அறிவிப்புகளை கூகுள் ஆன்லைன் நேரலையில் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர, இந்த வாரம் துவங்கி ஜூலை 1-ம் திகதி வரை உலகளவில் அனைத்து ஜி சூட் வாடிக்கையாளர்களுக்கும் அட்வான்ஸ்டு ஹேங்அவுட்ஸ் மீட் காணொளி  கான்ஃபரென்சிங் வசதியினை இலவசமாக பயன்படுத்துவதற்கான வசதியை வழங்குவதாக கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்து இருக்கிறார்.