கொரோனா வைரஸ் தாக்கும் முறை கண்டுபிடிப்பு! சென்னை ஐ.ஐ.டி விளக்கம்-

புதன் சனவரி 13, 2021

கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுகளை பல்வேறு உலக நாடுகள் மேற்கொண்டிருக்கும் நிலையில், சென்னை ஐஐடி ராசிரியர் மகேஷ் பஞ்சனுலா தலைமையிலான குழு குறைவாக சுவாசிக்கும் குறைபாடு உடையவர்களுக்கு கொரோனோ எளிதில் தொற்றக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வினை இயற்பியல் தொழில்நுட்ப அடிப்படையில் நீர்ம துளிகளை பயன்படுத்தி மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி வண்ணத்தால் தயாரான நீர்ம துளிகளை நுரையீரலில் உள்ள காற்று பைகளின் அளவு கொண்ட 0.3முதல் 2மில்லி மீட்டர் கொண்ட குழாய்களில் செலுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி குழாய்களில் செலுத்தப்பட்ட நீர்ம துளிகள் அதிக அளவில் குழாய்களில் தங்குவதை ஆய்வில் உறுதி செய்திருக்கின்றனர்.

இதன்படி குறைந்த சுவாசிக்கும் திறன் கொண்டவர்கள் எளிதாக நோய்த் தொற்றுக்கு ஆளாவதை உறுதி செய்திருப்பதாக ஐஐடி தெரிவித்துள்ளது.