கொரோனா வலியுணர்த்தும் பாடல் காணொளி

திங்கள் மே 31, 2021

உலகெங்கும் கொரோனா கொடுந்தொற்று அன்றாடம் நம்மை அல்லோலப்படுத்துகிறது.. புவிப்பந்தை சுற்றும் புதிய கோள்கள் போல் கொரோனா வைரஸ் சுற்றிவருகின்றன. தடுப்பு நடவடிக்கைகளை மருத்துவ அறிவியல் அலசிக்கொண்டிருக்கிறது.

கொரோனா கொடுந்தொற்றின் முதல் அலையின் தாக்கம் முடிந்து மூச்சு விடுவதற்குள் இரண்டாம் அலையின் தாக்கம் பல ஆயிரக்காண மனிதர்களின் மூச்சை நிறுத்த முண்டியடித்துக் கொண்டு முன்னால் நிற்கிறது. மனித நுரையீரல் ஒவ்வொன்றும் தூயக்காற்றைத் தேடி அழுகிறது.

கொரோனாவின் மீளா துயரத்தில் அன்றாடம் எத்தனை எத்தனை சாவுகள்! மனம் வலிக்கிறது.

 இந்த பேரிடரில் உயிருக்கு அஞ்சாது மக்களுக்கு பணியாற்றும் மருத்துவர்களும், செவிலியர்களும், துப்புரவு தொழிலாளர்களும், காவல்துறையினரும், முன்களப்பணியாளர்களும் நன்றிக்குரியவர்களே! அவர்கள் தான் இன்றைக்கு மனிதவடிவில் வாழும் தெய்வங்கள்!

அவர்களுக்கான நன்றியுணர்ச்சியோடும், கொரோனா கொடுந்துயர் வலியையும் எடுத்துரைக்கும் பாடலாக இந்தப் பாடல் வெளிவந்திருக்கிறது.  ஊடக நண்பர்கள் ஆதரவு நல்குமாறு கேட்டுக் கொள்கிறோம்!

பாடல் : கவிஞர் கவிபாஸ்கர் ( திரைப்படப்பாடலாசிரியர்)
இசையமைத்துப்பாடியவர் : திரைப்படப்பின்னணிப்பாடகர் முனைவர் சித்தன் ஜெயமூர்த்தி