கொரோனாவா? நீண்ட காலம் போராட வேண்டியது வரும் ஆராய்ச்சியாளர்கள்!!

வெள்ளி ஜூலை 16, 2021

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு உடல் சோர்வு,மூச்சு திணறல், தசை வலி,இருமல், மூட்டு வலி,நெஞ்சுவலி,வாசனை உணராமை, வயிற்றுப்போக்கு,சுவையின்மை ஆகியவை அறிகுறிகளாக கருதப்படுகின்றன.

இந்த அறிகுறிகள் தொடர்பாக இங்கிலாந்தில் பர்மிங்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை‘ராயல் சொசைட்டி ஆப் மெடிசின்’பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.

அதில் 5-க்கும் மேற்பட்ட அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்புக்கு ஒருவர் ஆளாகிறபோது,அவர் மாதக்கணக்கில் கொரோனா தொற்றினால் மோசமாக அவதிப்பட நேரிடும் என தெரிய வந்துள்ளது.

குறிப்பாக உடல் சோர்வு,தலைவலி,மூக்கு ஒழுகுதல்,இருமல்,நாசி நெரிசல் ஆகியவற்றுடன் சுவாச கோளாறு இருந்தால் நீண்ட காலம் கொரோனா பாதிப்பு இருக்கும் என தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கினர், கொரோனாவால் 8 வாரங்களுக்கு மேலாக மோசமாக பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.