கொரோனாவை குணப்படுத்தும் பழங்குடிகளின் உணவான சிகப்பு எறும்பு சட்னி!

சனி சனவரி 02, 2021

2020 தொடக்கத்திலிருந்தே உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனோ என்ற கொடிய வைரஸ் பல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா அமெரிக்கா பிரிட்டன் போன்ற உலக நாடுகள் அனைத்தும் இவ் வைரஸை விரட்ட பல்வேறு கட்ட சோதனை முயற்சியில் விஞ்ஞானிகள் மேற்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பக்கம் சோதனை முயற்சி இன்னொருபுறம் உருமாறிய கொரோனா வைரஸ். இந்த வைரஸை விரட்ட எப்பொழுது தடுப்பூசி வரும் என்று உலக மக்களின் கேள்வியாக இருக்கிறது. 

இந்ந்நிலையில் தான் கொரோனாவை குணப்படுத்தும் வகையில் சிவப்பு எறும்பு சட்னி செயல்படுகிறதா என்பதை ஆராய உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளது.

இன்னமும் உரிய மருந்து கண்டுபிடிக்காத சூழலில் கோவிட்-19 பாதிப்பை குணப்படுத்த சிவப்பு எறும்பு சட்னி தீர்வாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் ஒடிசா, சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் வாழும் பழங்குடி மக்கள் சிவப்பு எறும்பு சட்னியை பாரம்பரியாக சாப்பிட்டு வருகின்றனர்.

இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. இது சிவப்பு எறும்புகள், பச்சை மிளகாய் ஆகியவற்றின் கலவையாக உருவாக்கப்படுகிறது. இதன்மூலம் ப்ளூ, இருமல், சளி, சுவாசப் பாதிப்புகள், உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் தீர்க்கப்படுவதாக பழங்குடி மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனாவை சிவப்பு எறும்பு சட்னி முழுவதுமாக குணமாக்கி விடும் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக CSIRக்கு ஜூன் 23ஆம் தேதியும், ஆயுஷ் அமைச்சகத்திற்கு ஜூலை 7ஆம் தேதி ஒடிசா மாநிலம் பரிபடாவைச் சேர்ந்த பொறியாளர் நயதார் பதியால் பரிந்துரை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், சிவப்பு எறும்பு சட்னியில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருக்கின்றன. தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படக் கூடியது. குறிப்பாக ஜீரண மண்டலத்தில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்கும் வல்லமை பெற்றது.

இதன் தொடர்ச்சியாக ஒடிசா உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை நயதார் பதியால் தாக்கல் செய்துள்ளார். அதில், கொரோனாவை எதிர்க்கும் ஆற்றல் சிவப்பு எறும்பு சட்னியில் இருக்கிறது. காலங்காலமாக இதனை சாப்பிட்டு வரும் பழங்குடியின மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

எனவே கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு சிவப்பு எறும்பு சட்னியை பயன்படுத்த பரிந்துரை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர் சாரங்கி மற்றும் பிரமாத் பட்நாயக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நயதார் பதியால் தாக்கல் செய்த மனு எந்தவித கருத்தையும் தெரிவிக்க நாங்கள் விரும்பவில்லை.

அதேசமயம் மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் மற்றும் CSIR-ன் பொது இயக்குநருக்கு உத்தரவு ஒன்றை பிறப்பிக்கிறோம். சிவப்பு எறும்பு சட்னியில் உண்மையாகவே கொரோனாவை எதிர்க்கும் வல்லமை இருக்கிறதா? இதனை கொரோனா வைரஸ் பாதிப்பிற்கான சிகிச்சையில் பயன்படுத்தலாமா? என்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அடுத்த மூன்று மாதங்களில் உரிய முடிவு எடுக்க வேண்டும். இதுதொடர்பான விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.