கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலம் பூந்தோட்டத்தில் தகனம்

வியாழன் சனவரி 21, 2021

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவரின் சடலம், வவுனியா - பூந்தோட்டத்தில் அமைந்துள்ள நகர சபையால் பராமரிக்கப்பட்டுவரும் மின் மயானத்தில், இன்று நண்பகல் 12 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.

இருதய நோயாளியான இவர், மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் (19) காலை உயிரிழந்தார்.

மன்னார் - உப்புக்குளத்தைச் சேர்ந்த 61 வயதுடைய இஸ்லாமியர் ஒருவரே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.