கொரோனாவின் பிடியினால் மற்றுமொரு ஈழத்தமிழர் இலண்டனில் மரணம்!

ஞாயிறு ஏப்ரல் 05, 2020

இலண்டனில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவர் யாழ்ப்பாணம் – மீசாலை மேற்கை பிறப்பிடமாகவும் பிரித்தானியா நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணசாமி சியாமளன் என்ற 42 வயதான குடும்பஸ்தராவர்.

நேற்றிரவு இவர் உயிரிழந்ததாக அவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

கொரோனா தொற்றுக்கான ஆரம்ப நிலை அறிகுறிகள் தென்பட்டதன் அடிப்படையில் அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக உயிரிழந்தவரின் குடும்ப வைத்தியரான டொக்டர் எஸ்.சிவராஜ் தெரிவித்துள்ளார்.

இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒரு மகனுக்கு (வயது 2) மற்றும் ஒரு பிள்ளை பிறந்து 6 மாதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.