கொரோனாவினால் நேரில் சந்திக்க தடை

புதன் அக்டோபர் 28, 2020

கொரோனா தொற்று பரவல் காரணமாக சிறையில் கைதிகளை அவர்களுடைய குடும்பத்தினர் நேரில் சந்தித்து பேச தடை விதிக்கப்பட்டுள்ளதால் நளினி-முருகன் நேற்று 10 நிமிடங்கள் வாட்ஸ்-அப் காணொளி பேசியில்  பேசினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் தனி சிறையிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கணவன்-மனைவி இருவரும் நீதிமன்ற  உத்தரவுப்படி 15 நாட்களுக்கு ஒருமுறை நேரில் சந்தித்து பேசி வந்தனர்.
 
கொரோனா தொற்று பரவல் காரணமாக சிறையில் கைதிகளை அவர்களுடைய குடும்பத்தினர், உறவினர்கள், வக்கீல் நேரில் சந்தித்து பேச தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்று ஏற்பாடாக கைதிகள் செல்போனில் வாட்ஸ்-அப் வீடியோ காலில் பேசி வருகிறார்கள்.

அதன்படி, நளினி-முருகன் நேற்று காலை 11 மணி முதல் 11.10 மணி வரை 10 நிமிடங்கள் வாட்ஸ்-அப் வீடியோ காலில் பேசினர். அப்போது நளினியின் பரோல், தந்தையின் அஸ்தியை கடலில் கரைக்க முருகன் பரோலுக்கு விண்ணப்பிப்பது மற்றும் புழல் ஜெயிலுக்கு 2 பேரையும் மாற்றுவது தொடர்பாக அவர்கள் பேசிக் கொண்டனர் என்று சிறையில் காவலர்கள் தெரிவித்தனர்.