கொரோனாவுக்கு வைரமுத்து எழுதிய கவிதை!

புதன் மார்ச் 04, 2020

கொரோனா வைரஸ் தொற்று  காரணமாக மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில் கொரோனா வைரசை எதிர்கொள்வது பற்றி கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த கவிதை இதோ!

"உணவை மருந்தாக்கு
உடம்பை இரும்பாக்கு

மூச்சுப் பைகளில்
நம்பிக்கை நிரப்பு
நோய்த் தடுப்பாற்றல்
பெருக்குதல் சிறப்பு

கோவிட் - 19
கொல்லுயிரியை
எழுந்து எதிர்கொள்
இந்திய நாடே!"