கோதாபய ராஜபக்ஷவுடன் விரைவில் நேரடியாக பேச்சுவார்த்தை!

வியாழன் ஓகஸ்ட் 22, 2019

பொதுஜன பெரமுனவுடனான கூட்டணி தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளன.

எனினும் இதில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து எந்த தீர்மானமும் எடுக்கப்படமாட்டது என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, வேட்பாளர் குறித்து கோதாபய ராஜபக்ஷவுடன் நேரடியாக பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு அவருடனேயே புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்து கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டார். 

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.