கொடிய கொரோனாவால் கண்கலங்கவைக்கும் சம்பவம்

புதன் ஏப்ரல் 08, 2020

உலக மக்களை ஒட்டுமொத்தமாக கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கின்றது கொரோனா எனும் கொடிய அரக்கன். நாளுக்குநாள் இதனால் பலிவாங்கப்படும் மனித உயிர்களின் எண்ணிக்கையானது மிகவும் அதிகமாகிக் கொண்டேபோகின்றது.

பெரியவர்கள், சிறியவர்கள், பணக்காரர், ஏழைகள் என பாராபட்சம் பார்க்காமல் அனைவரையும் ஆட்டிப்படைத்துகொண்டுருக்கின்றது இந்த கொடிய கொரோனா. இதன் கொடிய இரைக்கு ஐரோப்பிய நாடுகளிலும் பலர் உயிரிழந்துள்ளதுடன், எண்ணிலடங்காதோர் இதனால் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.

இந்நிலையில் ஐரோப்பிய நாடொன்றில் மனைவியை கொடிய கொரோனா தாக்கியதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரது கணவர் வெளியே நின்று கதறி அழுகின்றார்.

எந்தபெரிய போர்களத்தை சந்தித்த வீரனும் கூட இந்த காட்சியை காண்கையில் கண்கலங்கிவிடுவான். தன் ஆருயிர் மனைவி கண்முன்னே இருந்தும், உயிர்கொல்லி நோய் அவரை பீடித்திருப்பதால் அரவணைத்து ஆறுதல் சொல்ல முடியாமல் அவரின் பிம்பத்தினை தொட்டு கணவன் கண்ணீர் விடும் காட்சியானது பலரின் உள்ளங்களையும் கனக்கச்செய்துவிடுகின்றது.