கோட்டாபய சிங்கப்பூருக்கு பயணம்!

வியாழன் அக்டோபர் 10, 2019

மருத்துவ சிகிச்சைக்காக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.அந்தவகையில் இன்று (வியாழக்கிழமை) காலை சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான SQ 468 ரக விமானத்தில் சிங்கப்பூருக்கு பயணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று தொடக்கம் 12ஆம் திகதி வரை சிங்கப்பூர் செல்ல கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விசேட மேல் நீதிமன்றம் கடந்த 3 ஆம் திகதி அனுமதி வழங்கியிருந்தது.

அதன்படி நீதிமன்றத்தின் பொறுப்பிலுள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் கடவுச்சீட்டை கையளிக்குமாறு இதன்போது நிரந்த விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.

மேலும் நாடு திரும்பியதன் பின்னர் வௌிநாட்டு கடவுச்சீட்டை நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்குமாறு சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதியரசர்கள் கொண்ட நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.