கோட்டாபய ராஜபக்ச ஆட்சி தெற்காசிய பிராந்தியத்திற்கு பேராபத்தாகும்

வெள்ளி நவம்பர் 22, 2019

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்றிருப்பது தெற்காசிய பிராந்தியத்திற்கு பேராபத்தாகும் என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச தெரிவாகியுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தஞ்சாவூரில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய திருமுருகன்காந்தி இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவாகியிருப்பது தெற்காசிய பிராந்தியத்திற்கு பேராபத்தாகும். அதேபோல், மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டிருபது, இலங்கை தமிழர்களுக்கு மட்டுமல்ல தமிழகத்திலுள்ள தமிழர்களுக்கும் ஆபத்தாகும். இந்திய அரசின் உதவியின்றி இவர்கள் அதிகாரத்திற்கு வந்திருக்க முடியாது. கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்றிருப்பது தமிழக மீனவர்களுக்கு ஆபத்தாகும். கடந்தகால ஆட்சியில் இடம்பெற்ற படகுகள் பறிமுதல், மீனவர்கள் வலை அறுப்பு என்று தொடரும். இந்திய அரசின் வெளியுறவுத்துறை எப்படி தமிழர்களை பாதுகாக்கும்?” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்