கொத்தமல்லியில் கொட்டிகிடக்கும் மருத்துவ குணங்கள்!

சனி செப்டம்பர் 07, 2019

கொத்தமல்லி உடல் நலத்திற்குப் பல வகையான நன்மைகளைக் கொடுக்க கூடிய முக்கிய உணவாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் முக்கிய உணவாகவும், உணவை அலங்கரிக்கவும் கொத்தமல்லி இலைகள் பயன்படுகின்றன. கொத்தமல்லி உடல் நலத்திற்குப் பல வகையான நன்மைகளைக் கொடுக்க கூடிய முக்கிய உணவாகவும் மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது உணவிற்கு சுவையை கூட்டுவதோடு நமக்கு ஏற்படும் பல்வேறு நோய்களையும் நீக்குகிறது.

கொத்தமல்லியில் உள்ள சத்துப்பொருட்கள் :

வைட்டமின் ஏ,பி,பி1,சி, கால்சியம், இரும்புச்சத்து, தயமின், நியாசின், ரிபோப்ளேவின், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், மாங்கனீசு, ஆக்சாலிக் ஆசிட், போலிக் ஆசிட், மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, நீர்ச்சத்து.

கொத்தமல்லி உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் விதம்

கொத்தமல்லியை வீட்டுத் தோட்டங்களில் மட்டுமின்றி சிறு தொட்டிகளில் கூட வளர்க்கலாம், வழக்கமாக ரசம், சாம்பார், குழம்பு போன்றவற்றில் மணத்திற்காக இக்கீரையைப் பயன்படுத்துகிறோம். கொத்தமல்லியை தினமும் அளவோடு உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அது நரம்பு, எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்குகின்றது. கொத்தமல்லி பசியைத் தூண்டக்கூடியது. வாயு பிரச்சனைகளை குணமாக்குகின்றது.

கொத்தமல்லியை தினந்தோறும் உணவில் சேர்த்து வருவதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு அளவைக் குறைக்கின்றது. மேலும், உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்கச்செய்கிறது. கல்லீரலின் செயல்பாட்டை ஒழுங்குப்படுத்து கின்றது. அதனை பலப்படுத்தவும் செய்கிறது.
மலக்குடலை ஒழுங்குப்படுத்துகின்றது. இன்சுலின் சுரப்பை ஒழுங்குபடுத்துகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் கே- அல்சீமியர் நோயை குணமாக்க உதவுகின்றது.

மேலும் இதில் உள்ள வைட்டமின் ஏ,பி,சி - நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. சிறந்த ஆன்டி-ஆக்சிடன்ட் ஆக செயல்படுகிறது. நுரையீரலை பாதுகாக்கச் செய்கிறது. வாய்ப்புண்ணை குணமாக்க உதவுகிறது. வயிற்றில் வாயு தொல்லை மற்றும் செரிமான கோளாறுகளை சரிசெய்கிறது. வாய்க்குமட்டல் உணர்வை குறைக்க உதவுகிறது சிறுநீர் பாதை தொற்றுகளைத் தடுக்கிறது.

கண்பார்வை கோளாறுகள், வெண்படல அழற்சி போன்ற கண் பிரச்சினைகளை சரிசெய்கிறது.கொத்தமல்லி இலை மிகச் சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. சருமத்தில் படை, தோல் அரிப்பு போன்றவை உண்டானால் கொத்தமல்லி இலையை பசைபோல் அரைத்து தடவிவர குணமாகும்.

மேலும் முகத்தில் உண்டாகும் முகப்பருக்கள் மற்றும் தோலில் உண்டாகும் தழும்புகளுக்கு அரைத்துப்பசை போல் தடவிவர குணமாகும். இதன் இலையை எண்ணைய் விட்டு வதக்கி வீக்கம், கட்டிகளுக்குகட்ட அவை சீக்கிரம் கரைந்துப்போகும். விதையை இளம் வறுப்பாக வறுத்து சாப்பிட குருதிக்கழிச்சல், செரியாக் கழிச்சல் குணமாகும். கொத்தமல்லி விதையுடன் சோம்பு சமபங்குச் சேர்த்து சாப்பிட்டு வர சாராய வெறி நீங்கும். அடிக்கடி ஏப்பம் வருவது குணமாகும்.

இருதயம் வலிவுபெறும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவு குறையும். மாரடைப்பு உண்டாவது தடுக்கப்படுகிறது. இதன் விதையை வாயிலிட்டு மெல்ல வாய் நாற்றம் குணமாகும்.