கோத்தபாயவை இலகுவாக வெற்றிக்கொள்வோம்!

திங்கள் ஓகஸ்ட் 12, 2019

விடுதலை புலிகள் இயக்கம் வலுவிழக்க கர்ணாவின் பிரிவே பிரதான காரணமாகியது. இதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே செயற்பட்டார். இதனால் கிடைத்த வெற்றியை இன்று ராஜபக்ஷ குடும் உரிமை கோருவதாக தெரிவித்த அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல , ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜக்ஷவை இலகுவாக தோற்கடிப்போம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

கண்டி - குண்டசாலை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பாட்டார். 

அதேபோன்று கோத்தபாயவை தோற்கடிக்க கூடிய ஒரு வேட்பாளரை  ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் களமிறக்குவோம் என்றும் கூறினார்.