கொட்டும் மழையின் மத்தியிலும் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்!!

புதன் சனவரி 13, 2021

கடந்த 10ந் திகதி பெரியகல்லாறு நாவலர் வீதியில் உள்ள வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 11வயது சிறுமிக்கு நியாயம் கோரி 13ந் திகதி பெரியகல்லாறு பொதுமக்கள் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் கொட்டும் மழையின் மத்தியிலும் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.

அதில் பெருமளவு பெண்கள் உணர்வுபூர்வமாக தங்கள் கண்டணத்தை வெளியிட்டனர்.

இதற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டுமென கோஷமிட்டனர்.