‛ கோவாக்சின், கோவிஷீல்டு' தடுப்பூசிகளை பயன்படுத்த ஒப்புதல்

ஞாயிறு சனவரி 03, 2021

கொரோனாவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட ‛ கோவாக்சின், கோவிஷீல்டு' தடுப்பூசிகளை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த, இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.

ஆக்ஸ்போர்டு பல்கலை உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியை தயாரிக்கும் ஒப்பந்தத்தை மஹாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்த சீரம் நிறுவனம் பெற்றுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த ‛பாரத் பயோடெக்' நிறுவனமும், ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைப்பும் இணைந்து ‛கோவாக்சின்' என்ற தடுப்பூசி தயாரித்துள்ளன. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் இந்த தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.