கொவிட் 19 வைரசின் இரண்டாவது அலை விரைவில் உருவாகக்கூடும்

புதன் மே 27, 2020

உலகலாவிய ரீதியில் கொவிட் 19 வைரசின் இரண்டாவது அலை விரைவில் உருவாகக்கூடும் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பேராசிரியர் மயிக் ரயன் இதனை நேற்று முன்தினம்  (25) நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாம் கொவிட் 19 தொற்று அதிகளவில் பரவக்கூடிய சூழலிலேயே வாழ்கின்றோம். ஏந்தநேரத்திலேனும் நோய் தொற்று அதிகரிக்க கூடும் என்பதை அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

நோய் தொற்று குறைவடைகின்றது, இரண்டாவது அலைக்கு தயாராக சில மாதங்கள் எடுக்கும் என்பது தொடர்பில் எம்மால் எதனையும் கூறிவிட முடியாது.

சிலவேளை இரண்டாவது அலை ஏற்படலாம்.

தற்போது நாடுகளில் கொவிட் 19 தொற்றாளர்கள் குறைவடைவது இயல்பானது ஆகவே இதனை எந்தவொரு நாடும் குறைந்து மதிப்பிடுவது உகந்ததல்ல´ எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.