கப்டன் கஜன், லெப்.கேணல் நாதன், கேணல் பரிதி ஆகியோரின் கல்லறைகளில் இடம்பெற்ற மாவீரர் நாள்- 2021

திங்கள் நவம்பர் 29, 2021

பிரான்சில் மாவீரர் நாள் 2021 நிகழ்வுகளின் ஆரம்ப நிகழ்வுகள் 27.11.2021 சனிக்கிழமை அன்று வழமைபோல் பந்தனில் அமைந்துள்ள கப்டன் கஜன், லெப்.கேணல் நாதன், கேணல் பரிதி ஆகிய மாவீரர்களின் கல்லறைகள் அமைந்துள்ள பகுதிகளில் கொட்டும் மழைக்கு மத்தியில் இடம்பெற்றன.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கப்டன் கஜன், லெப்.கேணல் நாதன் ஆகிய மாவீரர்களுக்கான பொதுச்சுடரை சேர்ஜி தமிழ்ச்சங்கத் தலைவர் நிதுஷா சதீஸ்வரன் அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரை கப்டன் கஜன் அவர்களின் சகோதரர் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.

சமநேரத்தில் கேணல் பரிதி அவர்களின் கல்லறைக்கான பொதுச்சுடரினை ஒபேவில்லியே தமிழ்ச்சங்கத் தலைவர் ஜீவானந்தம் அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரை கேணல் பரிதி அவர்களின் தாயார் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து, பிற்பகல் 13.36 மணிக்கு மணி ஒலித்ததையடுத்து மாவீரர் துயிலும் இல்லப் பாடல் ஒலித்தது. தொடர்ந்து அனைவரும் சுடர்ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினர்.