கரந்தாய் காணிகளுக்குள் கால் பதித்த மக்கள்!

செவ்வாய் ஏப்ரல் 16, 2019

கிளிநொச்சி, பளை,கரந்தாய்ப் பகுயில் உள்ள மக்களின் 90 ஏக்கர் காணியை தென்னை அபிவிருத்தி சபை கைப்பற்றி மக்களை மீளக் குடியேற விடாது தடுத்து வைத்திருந்த நிலையில் இன்று மக்கள் தாமே புகுந்து தமது காணிகளுள் புகுந்து நிலைகொண்டுள்ளனர்.

 

1995ம் ஆண்டில் இடம்பெற்ற யுத்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக கரந்தாய் உள்ளிட்ட பகுதிகள் முகமாலை முன்னரங்க சூழலுள் அகப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் 2009 போர் முடிவுற்ற பின்னர் கரந்தாய் பகுதிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டிருந்த போதே மக்களின் 90 ஏக்கர் காணியை தென்னை அபிவிருத்தி சபை கைப்பற்றி மக்களை மீளக் குடியேற விடாது தடுத்து வைத்துள்ளது.

 

இந்த நிலையில் மக்கள் பலதரப்பட்ட போராட்டங்களை நடத்தியும் காணிகள் கிடைக்கப் பெறாத நிலையில் இன்று காலை 06 மணியளவில் தமதுகணிகளுக்குள் உள் நுளைவுப் போராட்டத்தில் ஈடுபட்டு, தமது காணிகளில் கொட்டகைகளை அமைக்கும் பணியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

 

இதனிடையே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தமது காணிகளுள் தங்கியுள்ள மக்களை நேரில் சென்று சந்தித்திருந்தார்.