கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மருந்து!

செவ்வாய் பெப்ரவரி 05, 2019

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயிலிருந்து  பெண்களைப் பாதுகாக்க, வழங்கப்படும் ஊசி மருந்துக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதியளித்துள்ளது.

அதற்கமைய, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயாளர்களுக்காக பெப்பிலோமா வைரஸ் ஊசி மருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன்  விசேடமாக வறிய நாடுகளைச் சேர்ந்தப் பெண்களுக்கு இந்த ஊசி மருந்துகளை வழங்குவதற்கு புற்​றுநோய் நிபுணர்கள் கவனஞ் செலுத்தியுள்ளனர்.

கடந்தாண்டு இக்கர்ப்பப்பை புற்றுநோயால் உலகம் முழுவதும் 5,70,000 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களென்று உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் 3,10,000 பெண்கள் இந்நோயால் உயிரிழக்கின்றதுடன், இதில் பெரும்பான்மையானோர் வறிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய அடுத்தாண்டு பெப்பிலோமா வைரஸ் ஊசி மருந்தை வறிய நாடுகளைச் சேர்ந்த 40 மில்லியன் பெண்களுக்கு வழங்குவதே தமது நோக்கமென, கடந்த வாரம் அறிக்கையொன்றை வெளியிட்டு உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளதுடன், இதன்மூலம் 90,0000 மரணங்களை தடுக்க முடியும் என்றும் அறிவித்துள்ளது.