கரும்புலி மேஜர் சோபிதன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்!!

சனி அக்டோபர் 24, 2020

24.10.2000 அன்று “ஓயாத அலைகள் – 04″ நடவடிக்கையில் யாழ். மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலி மேஜர் சோபிதன், கரும்புலி மேஜர் வர்மன், கரும்புலி கப்டன் சந்திரபாபு ஆகிய கரும்புலி மாவீரர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

கரும்புலி மேஜர் சோபிதன்
துரைச்சாமி ஜீவகணபதி
தச்சன்குளம், மூன்றுமுறிப்பு, வவுனியா
வீரச்சாவு: 24.10.2000

கரும்புலி மேஜர் வர்மன் (மேனவன்)
வடிவேல் தங்கத்துரை
தேற்றாத்தீவு, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.10.2000

கரும்புலி கப்டன் சந்திரபாபு
குமரப்போடி லிங்கராசா
படையாண்டவெளி, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.10.2000

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111