கரும்புலி மேஜர் மலர்விழி,கரும்புலி மேஜர் ஆந்திரா(நாயகம்),கரும்புலி கப்டன் சத்தியா (சசி)மாவீரர்களின் வீரவணக நாள்!!

புதன் மார்ச் 31, 2021

ஓயாத அலைகள் 03 நடவடிக்கையின் போது 31.03.2000 அன்று ஆனையிறவுத் தளத்தினைக் கைப்பற்றும் சமரிற்கு வலுச்சேர்ப்பதற்காய் தாமரைக்குளப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிறீலங்கா படையினரின் ஆட்லறி தளத்தினுள் ஊடுருவி நான்கு ஆட்லறிகளைத் தகர்த்தழித்துவிட்டு வெற்றியோடு தளம் திரும்பிக்கொண்டிருந்தவேளை இடையே சிறீலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் மலர்விழி, கரும்புலி மேஜர் ஆந்திரா, கரும்புலி கப்டன் சத்தியா ஆகிய கரும்புலி மாவீரர்களின் 21ம் ஆண்டு வீரவணக நாள் இன்றாகும்.

வீரத்தின் சிகரங்களாக 31.03.2000 அன்று தம் நீண்டகாலக் கனவை நிறைவேற்றி நான்கு ஆட்லறிகள் தகர்த்து மூன்று பெண் கரும்புலிகளும் மிகவும் துணிச்சலோடு சண்டையிட்டு எதிரியின் கோட்டையாயிருந்த தாமரைக்குளப் பகுதியில் பன்னிரெண்டு கொமாண்டோக்களைக் கொன்று கொமாண்டோப் படையைக் கதிகலங்கவைத்து மகிழ்வோடு எங்கள் தேசத்தின் நினைவுக் கற்களில் அழியாதபடி ஓயாத அலைகளின் வெற்றிவீரர்களாக தங்கள் பெயரையும் பொறித்துக்கொண்டார்கள்.

கரும்புலி மேஜர் மலர்விழி
பாலகிருஸ்ணன் சங்கீதா
வண்ணார்பண்னை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.03.2000

111

கரும்புலி மேஜர் ஆந்திரா (நாயகம்)
விநாயகமூர்த்தி சுதர்சினி
மருதங்கேணி தெற்கு, தாளையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.03.2000

111

கரும்புலி கப்டன் சத்தியா (சசி)
கிருஸ்ணமூர்த்தி முகுந்தினி
நெல்லியடி, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.03.2000

111

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111