கரும்புலி மேஜர் ரங்கன்/தினேஸ்குமார் 26ம் ஆண்டு வீரவணக்க நாள்!!

ஞாயிறு டிசம்பர் 05, 2021

மட்டக்களப்பு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பகுதியில் 05.12.1995 அன்று சிறிலங்கா விசேட அதிரடிப்படையின் முகாம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் ரங்கன் / தினேஸ்குமார் ஆகிய கரும்புலி மாவீரரின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

புத்துார், நவக்கிரி பகுதியிலிருந்து சூரியக்கதிர் என்றமிகப்பெருமெடுப்பிலான படையெடுப்பை வலிகாமத்தில்மேற்கொண்ட சிங்களப்படையினர் 50நாட்கள் நடத்தியஉக்கிரசமரின் முடிவில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர்.

ஏறக்குறைய 5.5 இலட்சம் பேரைக் கொண்ட வலிகாமத்தில் ஒட்டுமொத்தமான சனத்தொகையும் முற்று முழுதாக வெளியேறிய நிலையில் வெறும் கட்டிடங்களுக்கு மத்தியில் 05.12.1995 அன்று சிங்களப்படை அமைச்சர் அநுருத்த ரத்வத்த சிங்கக் கொடியை ஏற்றிய ஒருசில மணிநேரத்தில்.

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் சிங்களச் சிறப்பு அதிரடிப் படையின் முகாம் மீது மேஜர் ரங்கன் கரும்புலித் தாக்குதலை நிகழ்த்தி சிங்களத்தின் ஆக்கிரமிப்பிற்கு பதிலடி கொடுத்தார்.

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111