கரும்புலி மேஜர் ரட்ணாதரன் வீரவணக்க நாள்!

வெள்ளி ஓகஸ்ட் 09, 2019

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990ம் ஆண்டுகளில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் மக்கள் மீதான பல்வேறு படுகொலைகளுடன் நேரடியாகத் தொடர்புடைய மட்டு.....

வாகரைப் பகுதி இராணுவ முகாமின் இரண்டாவது கட்டளை அதிகாரி மக்களால் சங்கிலியன் என அழைக்கப்படும் “மேஜர் கருணநாக்க” மீது 09.08.1999 அன்று மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் ரட்ணாதரன் ஆகிய கரும்புலி மாவீரரின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
 
விடுதலையின் கனவுகளுடன் துரோகத்தின் வாழ்வில் புயலான தேசத்தின் புயல்கள்……
 
நீளும் நினைவுகளாகி….
 
கரும்புலி மேஜர் ரட்ணாதரன்
 
தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.