கரும்புலி மறவன் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் உதிர்த்த இறுதி வார்த்தைகள்.... ...........

செவ்வாய் ஜூன் 11, 2019

அன்பின் அண்ணா! எங்கள் உயிர் மீது வெடி ஏந்தி வெடிக்கும் போது நாங்கள் உங்களை எண்ணியே வெடிக்கிறோம். நீங்கள் தமிழீழ தேசம் ஒன்றை கட்டி எழுப்பி அதில் எங்கள் மக்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்வார்கள் என்று நம்பியே வெடிக்கிறோம். அன்பின் அண்ணா! எங்கள் மக்கள் மிகவும் பாவப்பட்டவர்கள். அவர்கள் துன்பங்களை சுமந்து களைத்துப் போனவர்கள். அவர்களுக்கான சுதந்திரம் என்ன விலை கொடுத்தேனும் பெறப்பட வேண்டும். அதை நீங்கள் பெற்றுக்கொடுப்பீர்கள் என்ற முற்று முழுதான நம்பிக்கையுடன் வெடிக்கிறேன். அமையப்போகும் தமிழீழம் முற்று முழுதாக தன்னிறைவான பொருளாதாரத்தை கொண்டதாக இருக்க வேண்டுமெனில் அதற்குரிய அடிக்கல் இப்பொழுதே நாட்டப்பட வேண்டும்.

எமது நாட்டில் ஒரு பிச்சைக்காரரும் இருக்கக் கூடாது. அது வயது வந்தவர்கள் ஆனாலும் சரி சிறுவர்கள் ஆனாலும் சரி அப்படியானவர்களை எமது அரசாங்கம் தங்கள் பொறுப்பில் எடுத்து வளர்க்க வேண்டும்.

அதே போல் தமிழீழத்தில் அனைத்து பிரஜைகளும் கல்வி கற்றவராய் இருத்தல் வேண்டும்.

அதேபோல் உலகத்தின் அனைத்து விளையாட்டுகளும் எம் தேசத்தில் பயிற்றப்பெற்று எம் வீரர்கள் அனைத்திலும் முன்னிலையானவர்களாக இருக்க வேண்டும்.

ஏழை பணக்காரர் வேறுபாடு. சாதி சமய ஏற்றத்தாழ்வுகள் அற்ற ஒரு சமூகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

பெண்களுக்கெதிரான சீதனக் கொடுமைகள் முற்று முழுதாக ஒழிக்கப்பட வேண்டும். அவற்றில் எமது அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

உங்கள் பார்வைபடும் திசையெங்கும் பாய்ந்தே செல்கிறோம்......

பகை மீது பெரும் வெடியாக அதிர்ந்தே செல்வோம்.....

தேசமதின் விடிவிற்காய் உயிரில் வெடி ஏற்றுகிறோம்....

உங்கள் பாசமதில் என்றும் பாலகராய் வாழ்வோம்.......

இப்படிக்கு,
பா.அன்புமணி