கருப்பு பூஞ்சை நோய் இனங்காணப்பட்டுள்ளது!

புதன் செப்டம்பர் 15, 2021

கொரோனா தொற்றாளருக்கு  உருவாகும் கருப்பு பூஞ்சை நோய் தற்போது கொழும்பு, குருணாகல் மற்றும் இரத்தினபுரி பகுதிகளில் இருந்து இனங்காணப்பட்டுள்ளதாகப் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்

தற்போது குறித்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தங்களிடம் இல்லை என்றும் ஆனால் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக குறைவான எண்ணிக்கையாகவே இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொற்று அல்ல என்றாலும், நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்கள் ஆபத்தில் உள்ளாவார்கள் என்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் இந்த நோயால் மரணிக்க அதிக வாய்ப்புள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

கறுப்பு பூஞ்சை என்பது சுற்றாடல் சார்ந்த நோயாகும். இது குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
முகத்தில் அல்லது உடலில் ஏதேனும் வித்தியாசமான பருக்கள் மற்றும் அடையாளங்கள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தோல், மூக்கு, மூளை, நுரையீரல், கண்கள் அல்லது உடலின் வேறு எந்த உள் மேற்பரப்பிலும் ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.