கடலில் அள்ளுண்டு சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

வியாழன் அக்டோபர் 10, 2019

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி காவல் துறை  பிரிவுக்குட்பட்ட களுதாவளைக் கடலில் நீராடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (08) மாலை காணாமல் போன நிலையில் இன்று குறித்த இளைஞர் சடலமாக மிட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…. 

களுதாவளையைச் சேர்ந்த 5 இளைஞர்கள் இணைந்து கடற்கரைக்குச் சென்றுள்ளனர். கடற்கரையில் விளையாடிவிட்டு கடலில் குளித்துள்ளனர்.

இவ்வாறு குளித்துக் கொண்டிருக்கும்போது அருகில் நின்று குளித்துக் கொண்டிருந்த தமது நண்பர் கடலலையில் அள்ளுண்டு போவதை சக நண்பர்கள் அவதானித்துள்ளனர். பின்னர் அருகிலுள்ள கடற்படையினரிடம் அறிவித்துள்ளனர் உடன் இஸ்த்தலத்திற்கு விரைந்த கடற்படையினரால் இளைஞனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வாறு கடலில் அள்ளுண்டுபோன இளைனை மீனவர்களும், உறவினர்களுமாககடலில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இன்று வியாழக்கிழமை (10) மாலை கிராங்குளம் கடற்கரையில் சடலம் ஒன்று தெரிவதை அவதானித்த மீனர்கள் காவல் துறைக்கு அறிவித்துள்ளனர். 

இந்நிலையில் களுதாவளைக் கடலில் காணாமல்போன இளைஞனின் உறவினர்கள் குறித்த சடலத்தைப் பார்வையிட்டு இது தமது உறவினர்தான் என அடையாளம்காட்டியுள்ளனர்.